Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத் திணைக்களங்களில் காணப்படும் குறைபாடுகளை பொதுமக்கள் தெரியப்படுத்துவதற்காக talk2epgovernor@gmail.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்துள்ளதாக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அத்திணைக்களங்களின் குறைபாடுகள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் எமக்கு தெரியப்படுத்த முடியும். குறைபாடுகளை கண்டறிந்து இனிவரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கவே புதிய மின்னஞ்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தங்களுடைய நிர்வாகத்தில் உள்ள குறைகளை கண்டால் உங்களுடைய கருத்துகள், ஆலோசனைகளையும் அனுப்பிவைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago