Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, மீகஸ்வௌ பகுதியில் வீட்டுக்குப்பின் புறமாக உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற தாய், தந்தை, மகள் ஆகிய மூவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று (17) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த ரணசிங்ககே லஹிறு (36 வயது) கே.ரம்யலதா (33 வயது) மற்றும் அவர்களது மகளான ஆர்.மகேசிகா (11 வயது) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற போது மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்ததில், இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .