Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல்சலாம் யாசீம்,
திருகோணமலை - மஹாதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்தில் 06ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் குளிர் தாங்க முடியாமல் மயக்கமுற்ற நிலையில், மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (01)காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொறவெவ- 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.கே.ஜி.ஹஸான் (வயது 10) என்ற மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் வழமை போல் நேற்று பாடசாலைக்கு வருகை தந்த போது, வகுப்பில் குளிர் என கூறிக்கொண்டு இருந்ததாகவும் அதனையடுத்து சிறிது நேரத்தின் பின்னர் மயக்கமுற்றதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago