Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார், பதூர்தீன் சியானா
கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய உறுதி மொழிக்கிணங்க, வடமாகாணத்தில் பணியாற்றும் தம்மை கிழக்கு மாகாணத்துக்கு உடன் இடமாற்றியுதவுமாறு கோரி, பாதிக்கப்பட்ட சிற்றூழியர்கள், கிழக்கு மாகாண சபையின் முன்பாக இன்று (22) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையாக இருந்த போது கிழக்கில் பணியாற்றிய ஊழியர்கள், வடக்கு மாகாண சபை உருவாக்கத்தின் போது, கிழக்கில் இருந்து தாம் குலுக்கல் அடிப்படையில் இடமாற்றப்பட்டதாகவும் பல ஆண்டுகளாகியும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தாங்கள் தமது மாகாணத்துக்கு விடுவிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனர்.
பல போராட்டங்களின் பின்னர், 2015இல் 35 பேரும் 2016 இல் 35 பேரும் என 105 பேர் உள்வாங்கப்படுவார்கள் என, மாகாண ஆளுநர் எழுத்துமூலம் அறிவித்திருந்தார். எனினும்,அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக்கோரியே இவர்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
54 minute ago
3 hours ago