2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்குக்கே நியமிக்க பிரதமர் சம்மதம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், பதூர்தீன் சியானா, எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே நியமிப்பதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று, முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொழும்பில், இன்று காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்வியற் கல்லூரிகளில் 2016ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 407 ஆசிரியர்களில் 192 ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கும் மீதமான 215 ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கு வெளியேயும் நியமித்ததில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில், கிழக்கு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போதே, கிழக்குக்கு வெளியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் 2013ஆம் ஆண்டில் இருந்து வெற்றிம் நிலவிய கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான 1,134 ஆசிரியர் வெற்றிடங்களில், கடந்த மாதம் 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதனால், மீதமான 744 ஆசிரியர்களுக்கான நியமனம் பட்டதாரிகளில் இருந்து வழங்கவும் பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும் அப்பிரிவு தெரிவித்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X