2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சபைக்கு அருகில் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, கிழக்கு மாகாண சபைக்கு முன்னாலுள்ள பூங்காவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (02) காலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வேலுப்பிள்ளை தர்மராஜா (வயது 76) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை, திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X