2026 மார்ச் 21, சனிக்கிழமை

கிழக்கு முதலமைச்சரை சந்தித்தார் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்

Thipaan   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, திருகோணமலைக்கு விஜயம் செய்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டை, இன்று வெள்ளிக்கிழமை (14) அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை, ஐக்கிய நாடுகளில் சமர்ப்பிக்கப்படும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் உறுதியளித்ததாக, கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பை தொடர்ந்து, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது நாட்டில் உள்ள மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள், படையினருடைய இருப்பிடங்கள், மக்களது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் விதம், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினைகள் மற்றும் விதவைகள் தொடர்பாகவும் இதன்போது ஐ.நா. அதிகாரியின் கவனத்துக்க்கு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X