2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கு முதல்வர்- மலாகா முதல்வர் சந்திப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மலேசிய மலாக்கா மாநில முதலமைச்சர் டதுக் செரி ஐஆர் எச்.ஜே இட்ரிஸ் பின் எச்ஜே ஹாரொன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கட்டுநாயக்க விமான நிலைய முக்கிய பிரமுகர் வரவேற்பு மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை(08) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் கொழும்பு, திருகோணமலை, ஒலுவில் ஆகிய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், கிழக்கில் முதலீடு செய்தல் தொடர்பாகவும் அதற்கான முதலீட்டாளர்களை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு வருதல் சம்பந்தமாகவும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .