Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2018 மே 17 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மற்றும் மூதூர் சந்தை ஆகிய இடங்களில், அளவை மற்றும் நிலுவைகளில் மோடி செய்த 10 வர்த்தகர்கள், நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பரிசோதகர் எஸ். ரொசான் குமார் தெரிவித்தார்.
அளவை மற்றும் நிறுவை உபகரணங்களை சரி பார்த்து முத்திரை இடாது வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலும் பிழையான அளவை , நிறுவை உபகாரணங்காளக் கொண்டு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலும் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதெனவும் அவர் கூறினார்.
நிறுக்கும், அளக்கும் உபகரணங்களில் முத்திரை பதிக்கும் பணியை, திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இதன்பிரகாரம், எதிர்வரும் 23ஆம் திகதி , திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், திருகோணமலை நகர வர்த்தர்களின் அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரை பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால், இதுரை தங்களுடைய உபகரணங்களுக்கு முத்திரை பதிக்காத திருகோணமலை நகர வர்த்தகர்கள் வருகை தந்து, தங்களது வியாபார நடவடிக்கையை சட்டரீதியாக ஆக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago