Editorial / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியிலிருந்து மடுவத்து பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக அறுவைக்காக கொண்டுச் சென்ற கால்நடையுடன் இருவரை இன்று (11) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஒரு வயதுக்கும் குறைவான பசு ஒன்றை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கிண்ணியா அண்ணல் நகர், புதுக் குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 18,28 வயதுடைய இரு இளைஞர்கள் எனத் தெரிவித்தனர்.
கால் நடை, மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்களை கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago