2025 மே 14, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 10 பேர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையினரும் உப்புவெளி  பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 10 பேர், இன்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

 

மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மின் இணைப்பை சோதனையிட்ட வேளை, குறித்த நபர்கள் அனுமதியின்றியும் திருட்டுத் தனமாகவும் மின்சாரம் பெற்றுக்கொண்டமை தெரியவந்ததையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஆண்டாங்குளம் 4ஆம் கட்டை மற்றும் 5ஆம் கட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .