Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - சீனக் குடா பொலிஸ் பிரிவில் கருமலையூற்று பகுதியில், சட்டவிரோத மீன்பிடி சுருக்கு வலைகளுடன் நேற்று (01) மாலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, மேற்படி சுருக்கு வலைகளுடன், குடும்பஸ்தரொருவர் கடலுக்கு செல்ல ஆயத்தமான நிலையில், வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், வெள்ளை மணல், கருமலையூற்று, சீனக் குடா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய குடும்பஸ்தர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 225 மீற்றர் நீளம் கொண்ட சட்ட விரோத மீன்பிடி சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை குறித்த வலைகளுடன் சீனக் குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .