Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க, கடும் புதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் பெரேராவின் பணிப்புரைக்கு அமைவாக, சட்டவிரோத மணல் ஏற்றுவதைத் தடுப்பதற்கும், மணல் அகழ்வைத் தடுப்பதற்கும் கடும் புதிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக, கிண்ணியா, மூதூர் பகுதிகளில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மணலை ஏற்றாமல், அனுமதிப்பத்திரத்தின் சட்டங்களை மீறி, தங்களுக்கு ஏற்றவிதத்தில் செயற்படுவோருக்கு எதிராக, திருகோணமலை நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் மணல் ஏற்றும் நபர்களுக்கு மாத்திரமே வழக்குகள் பதியப்பட்டு தண்டங்கள் அறவிடப்பட்டு வந்ததாகவும், தற்பொழுது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றப்படும் வாகனங்களைக் கண்காணித்து, குறித்த வாகனம் ஏற்கெனவே குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்பொழுது கிண்ணியா பகுதிகளில் அதிக அளவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் வழங்குகின்ற தகவலை அடுத்து, இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago