2025 மே 14, புதன்கிழமை

சட்ட திருத்தங்கள் பற்றிய பயிற்சிப் பட்டறை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சமாதான பேரவையும் சக்தி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள திருகோணமலை மாவட்ட சமாதானக் குழுவின் தற்போதைய இலங்கை சட்டத் திருத்தங்கள் பற்றிய பயிற்சிப் பட்டறை,  திருகோணமலை வாடி வீடு கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்றது.

இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான மாதாந்த செயலமர்வின் போது, அரசமைப்பு சீர்திருத்தம் பற்றிய  விடயங்கள் சட்டத்தரணி ஜகத் லியனாராய்ச்சியால் விளக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11  பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இக்குழுவின் ஊடாக கிராம மட்டத்தில் சிறந்த முறையில் செயற்படும் தொண்டர்களைத் தெரிவு செய்து, கிராம மட்டத்திலும் பிரதேசத்திலும், மாவட்ட மட்டத்திலும் பேச்சவார்த்தை மூலம் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படும் தொண்டர்களை இக்குழுவுக்குத் தெரிவுசெய்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக, சக்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஏ.சதுராணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனைத்து இனங்களையும் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X