Niroshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.
கெகிராவ, பலாகல பகுதியைச் சேர்ந்த களுவாகே பியரத்தின (வயது 32) என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் நகரின் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் குறித்த நபர் நடமாடிய போது பிரதேசமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை திங்கட்கிழமை (18)காலை கைது செய்தனர்.
அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, தேசிய அடையாள அட்டையோ மற்றும் வேறு எந்தவிதமான ஆதாரங்களோ இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago