Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று, திருகோணமலை ரிங்கோ வாடி வீட்டில் இன்று (12) காலை நடை பெற்றது.
பிரித்தானிய உயரஸ்தானிகர் அலுவலகத்தின் நிதியுதவியுடன், ஆசிய பவுண்டேஷனின் உதவியுடன், தேசிய சமாதானப் பேரவையும் சக்தி அமைப்பும் இணைந்து, இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
அனைத்து மதங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு, ஏனைய மதங்கள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டு, ஒவ்வொரு மதங்களும் சொல்கின்ற போதனைகள் பற்றியும் கருத்துகள் பற்றியும் அவரவர் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பற்றியும் பகிர்வொன்று, இக்கலந்துரையாடலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஆசிய பவுண்டேசன் இணைப்பாளர் செல்வி கமாயா தேசிய சமாதான பேரவையின் இணைப்பாளர் துசந்ரா விஜயநாதன், சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி சதுராணி, திருமதி பிரிஜட் ஆகியோருடன் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
55 minute ago
1 hours ago