Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
கொள்ளை வட்டிக்காரர்களிடம் இருந்து வறிய மக்களை காப்பாற்றுவது சமுர்த்தி வங்கிகளின் பொறுப்பு. அதனை உணர்ந்து செயற்படவேண்டியவர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என சமூக நலனோன்புகை மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை - நிலாவெளி சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் சமுர்த்தி ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் சேனக ஒபயசிங்க தலைமையில் நேற்று (27) நடைபெற்ற சமுர்த்தி பிரதேச ஊடக இணைப்பாளர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“சில நிதி நிறுவனங்கள் மக்களை வட்டி எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளது. 150 அல்லது 160 வட்டி வீதங்களை அறவிடுகின்றது. அவ்வாறு பார்க்கையில் நூறு ரூபாய்க்கான வட்டி வருடத்துக்கு 1,650 ரூபாயையும் தாண்டி செல்கின்றது. அதேவேளை, கொடுத்த கடனில் 40 சதவீதம், 60 சதவீதம் என அறவீடு செய்வதுடன், மாதாந்த அறவீடு வாராந்தமாக மாறுவதுடன் தற்போது நாளாந்தமாகவும் மாறி வருகின்றது.
“ஆகவேதான், கடந்த இரண்டு வருடங்களாக முறையாக செயற்படாமல் இருந்த சமுர்த்தி திட்டத்தின் செயற்பாடுகளை ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி மக்களை தெளிவூட்டி சமுர்த்தி வங்கி கடன் வசதிகள் ஊடாக வளப்படுத்துவதற்காக சமுர்த்தி ஊடக இணைப்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்த இலவசமாக டப் மற்றும் லப்டெப் உபகரணங்களையும் வழங்கவுள்ளோம்.
“அத்தோடு, நவம்பர் 15ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்கவுள்ளோம். அவற்றில் அதிகமான நியமனங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குகின்றோம்.
“மேலும், 390 முகாமையாளர்களை சமுர்த்தி உதவி பணிப்பாளர்களாகவும், 600 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முகாமையாளர்களாகவும் தரமுயர்த்தவுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரெட்ண, திருமதி தமரா தசாநாயக்க, திணைக்கள் அதிகாரிகள் உத்தியோகத்தாகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago