Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
சம்பூர் அனல் மின்நிலயத்திட்டத்தை நிறுத்துமாறு மூதூர் பெண்கள் வலயமைப்பின் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கை கடிதம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மூதூர் பிரதேச பெண்கள் அமைப்பின் சார்பில் இத்திட்டத்தை நிறுத்தக்கோரி, சுமார் 500க்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தை கையொப்பங்கள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி செயலகத்துக்கு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த மகஜர் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு, அதன் பிரதியொன்றை பெண்கள் வலையமைப்பின் தலைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago