Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
சித்திரைப் புத்தாண்டையிட்டு திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 10 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், 24 மற்றும் 26 வயதுகளையுடைய 2 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கசிப்பு உற்பத்தி நிலையங்களிலிருந்து கசிப்புக் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் 5 இலட்சம் மில்லிலீற்றர் கோடாவையும் 75 ஆயிரம் மில்லிலீற்றர் வடிசாராயத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ள 10 கசிப்பு உற்பத்தி நிலையங்களும் இச்சந்தேக நபர்கள் இருவருக்கும் சொந்தமானது என விசாரணையில் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago