2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமுர்த்தி முத்திரை பெற்றுத்தரக் கோரி பேரணி

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட். ஏ.எம்.ஏ.பரீத்

தங்களுக்குச் சமுர்த்தி முத்திரை பெற்றுத்தருமாறு கோரி மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள்  அமைதிப் பேரணியில் இன்று (16) ஈடுபட்டனர்.  

நாவலடிச் சந்தியில் ஆரம்பமாகிய இப்பேரணி, மூதூர் பிரதேச செயலகம்வரை சென்றது. இதன்போது, பிரதேச செயலாளர் வி.யூசுப்பிடம் மகஜரைப் பொதுமக்கள்  கையளித்தனர்.  

இதன்போது பொதுமக்கள் தெரிவிக்கையில், 'வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  எங்களுக்கான  சமுர்த்தி முத்திரை  2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 4,674 குடும்பங்களுக்கு சமுர்த்தி முத்திரை கிடைக்க வேண்டியுள்ளது.

எங்களுக்குச் சமுர்த்தி முத்திரை கிடைக்காமை தொடர்பில்; பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய போதும், எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இனியும் காலம் கடத்தாது எங்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்' என்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X