Thipaan / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலையில் இருந்து கல்லோயாவுக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி, குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக, சீனக் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, முத்துநகர் ரயில் கடவையில் வைத்து, நேற்று சனிக்கிழமை (15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நிரோசன் மதுசங்க (24 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
குறித்தநபரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026