Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எம்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட்
உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு, இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலைக் கிளையின் இளைஞர் பிரிவும், திருகோணமலை ஹீரோ லியோ கழகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஊர்வலம், நேற்றுச் சனிக்கிழமை (13) இடம்பெற்றது.
திருமலை காளி கோவில் முன்பாக ஆரம்பித்த இக்கவனயீர்ப்பு ஊர்வலம், டொக்யாட் வீதி, பிரதான பஸ் நிலையம், பிரதான வீதி, கடற்காட்சி வீதியூடாக உட்துறைமுக வீதியில் திரும்பி இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலைக் கிளையினை வந்தடைந்தது.
இச்சங்கங்களின் இளைஞர்கள் ஆபத்தான போதை பொருள், மதுபானப் பாவனைத் தடுப்பு பற்றிய பதாதைகள் ஏந்திய வண்ணம் போதை வஸ்து, மதுபாவனைக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் முடிவில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு போதை வஸ்து, மது பாவனைத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு ஒன்றும் நடாத்தப்பட்டது. இக் கருத்தரங்கு திருகோணமலை சுகாதார அமைச்சினை சேர்ந்த பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திரு. ஆர். குணராஜன், திரு எஸ். உதயகுமார் ஆகியோரினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவை சங்கத் திருகோணமலை கிளைத் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், இளைஞர் பிரிவுத் தலைவர் திரு ஏ. பிரேமராஜா, கிளையின் நிறைவேற்று அதிகாரி டாக்டர் என். ரவிச்சந்திரன், செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தொண்டர்கள் திருகோணமலை ஹீரோஸ் லியோ கழகத் தலைவி செல்வி லியோ மதுவந்தி ஜனரஞ்சன், ஹீரோஸ் லியோ கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago