Editorial / 2018 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள சில்லறை கடையொன்றில், வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த சில்லறை கடை உரிமையாளரை, நேற்றிரவு (17) திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, 25 சிகரொட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ரத்னபாலசிங்கம் (52 வயது) எனவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களுடன் துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அவரை, திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago