2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் பிரதிநிதிகளுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கப்பூர், சுர்பானா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்று (04) நடைபெற்றது.

திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் சாரம்சங்களையும்  அத்திட்டத்தைத் தயாரிக்கும் வரையறையையும் தெளிவுபடுத்தும் விதத்திலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றது.

யுத்தத்தால் பாதிக்கப்ட்ட திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இலங்கையின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதன் மூலம் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், சிங்கப்பூர் சுர்பானா நிறுவனம், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்ட வரைவொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இத்திட்டத்தை, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் சுர்பானா நிறுவனத்தின் அதிகாரியொருவர், கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் ,போக்குவரத்து, நீர்வசதிகள், மின்சாரம் மற்றும் உயர் கல்வி வசதிகள் மேம்படுத்துவதற்குறிய உபாயங்கள் ஆராயப்பட்டன.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, சிங்கப்பூர் சுர்பான நிறுவன பிரதிநிதிகளிடம்  திருகோணமலை மாவட்டத்தில் இயற்கை வளங்களோ அல்லது கலை, கலாசார விழுமியங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத விதத்தில் இத்திட்டம் அமுல்படுத்த வேண்டுமெனவும் இத்திட்டத்தின் பலாபலன்கள் இம்மாவட்டத்தில் வாழும் சகல இன மக்களிடையே பகிரப்பட ​வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X