Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஜூலை 20 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியமான்கேணி காட்டுப் பகுதியில் , பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவொன்றின் சடலமொன்று, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அரியமான்கேணி காட்டுப்பகுதியில் நேற்று (19) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபரொருவர், சிசுவின் சடலமொன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025