Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 05 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறப்பில் சிறுநீரகக் கோளாறு இருந்தமையே, திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்துக்குக் காரணமென, சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு, கடந்த 3ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் பெற்றெடுக்கப்பட்ட சிசு, மறுநாள் வைத்தியசாலையை விட்டு வீட்டுக்குச் சென்ற 10 நிமிடத்துள்குள் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம், குச்சவெளி பொலிஸ் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி பகுதியில் நேற்று (04) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கட்டலில் படுக்கவைக்கப்பட்டிருந்த சிசு மயக்கமுற்றதை அவதானித்த உறவினர்கள், உடனடியாக நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, சிசு உயிரிழந்துள்ளதாக, வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிசுவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, இன்று (05) சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்திய போதே, சிசுவுக்குப் பிறப்பிலேயே சிறுநீரகக் கோளாறு இருந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டதாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
43 minute ago
46 minute ago