2025 மே 05, திங்கட்கிழமை

சிறுபான்மை கட்சிகள் ’ஒன்றாகப் பயணிப்பது காலத்தின் தேவை’

Editorial   / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்குள் சிறுபான்மை கட்சிகள் ஒரே அணியில் பயணிப்பது காலத்தின் தேவையாகுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

அலரி மாளிகையில், இன்று (05) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பெரும்பான்மை இனவாத சக்திகள் இணைந்து மேற்கொண்ட சதியின் மூலமாகவே நாடாளுமன்ற உருப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தா​ர்.

மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமராக நீடித்து ஆட்சியை மேற்கொண்டால், சிறுபான்மை சமூகம் எதிர்நோக்க நேரிடும் இன்னல்களை கருத்தில்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாககவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த யதார்த்த நிலையையும் கடந்த மஹிந்த ஆட்சியிலும் நல்லாட்சியிலும் தமக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் ஆராய்ந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவார்களென, தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மை கட்சிகள் ஒரே பாதையில் பயணித்து, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்குமிடத்து, பெரும்பான்மை இனவாத சக்திகளால் சூழ்ந்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை போல் அல்லாமல், எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என இம்ரான் எப்.பி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X