2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘சிறுபான்மை சமூகத்துக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சிறுபான்மை சமூகத்துக்குச் சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நோக்கமாகுமெனத் தெரிவித்த தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் எம்.எம்.முஸம்மில் முகைதீன், “சிறுபான்மைச் சமூகங்களைத் திருப்திப்படுத்தக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும் அதனுடன் இணைந்தே, எமது கட்சி பயணிக்கும்” என்றார்.

கட்சியின் தலைமைக் காரியாலயமான முள்ளிப் பொத்தானை "முள்ளி வில்லாவில்" இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு கன்னித் தேர்தலாக இருந்தாலும் கட்சி ஆதரவாளர்களும் உயர்பீடங்களைச் சேர்ந்தவர்களும் கட்சியின் வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றார்.

தமது கட்சியுடன் ஏனைய தேசியக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன எனக் கூறிய அவர், ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் எமது கட்சி எந்தப்பக்கம் சார்ந்திருக்கும் என்பதையும் எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கக் கூடியதுமான தீர்மானமொன்றை எடுப்போம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .