Editorial / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் 9 வயதுச் சிறுமியைப் பொல்லால் தாக்கி சித்திரவதை செய்த தந்தை, நேற்று (14) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, ரொட்டவெவயைச் சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார்.
மதுபோதையில் வருகை தந்து தனது கணவர், மகளை பொல்லால் அடித்து, நெற்றியிலும் முதுகிலும் காயப்படுத்தினாரென, மொறவெவ பொலிஸ் நிலையத்தில் மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளான சிறுமி, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளாரென, வைத்தியசாலை வைத்தியதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .