Editorial / 2020 மே 07 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்

வெசாக் தினத்தையொட்டி, ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு அமைய, திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த சிறைக் கைதிகள் நல்வர், இன்று (07) விடுதலை செய்யப்பட்டனர்.
தாபரிப்பு, சாராயம், அபராதம் செலுத்த முடியாத கைதிகளே, திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் தலைமையில், இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் பிரதான ஜெயிலர் சமந்த லியனகே, புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .