Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், தீஷான் அஹமட், பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாணத்திலுள்ள சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
தற்போது கிழக்கின் பெருமளவான வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்கின்றமையானது, மக்களுக்கான சேவைகள் சென்றடைவதிலுள்ள தடங்கலாகவே கருதவேண்டியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலை, இலங்கைத் துறைமுகத்துவாரத்தில் நேற்று இடம்பெற்ற ஆரம்ப வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இன்று எந்த வைத்தியசாலைக்குச் சென்றாலும் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்பில் எம்மிடம் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. பௌதீக ரீதியான வளங்களை நாம் கொண்டு சேர்க்கின்றபோதும் ஆளணிப் பற்றாக்குறையால் மக்களுக்கு அபிவிருத்தியின் பயனை முழமையாக அனுபவிக்க முடியாமல் போகின்றது.
“இது தொடர்பான முழுமையான ஆவணங்களை, நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம். எனவே, சிற்றூழியர்களை நியமிப்பதற்கான அனுமதியை நாம் விரைவில் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.
“அதனடிப்படையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளோம். இதன்மூலம் கிழக்கின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
“நாம் மிகவும் திட்டமிட்ட வகையில் கிழக்கின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றோம், பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறையை முழுமையான வகையில் தீர்ப்பதற்கான முழுத் திட்டத்தையும் வகுத்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
33 minute ago
35 minute ago