Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2018 மே 17 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோவிலடியில் நாளை (18) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, அக்கிளையின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிவன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையைத் தொடர்ந்து, நினைவுச் சுடர் ஏற்றுதல், தலைவர்களின் உரைகள் எனபன இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .