2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனக்குடாவில் பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் பசு பாலை மூலதனமாகக் கொண்டு, தயிர், வெண்ணெய் போன்றவற்றை சிறியளவில் செய்யும் தொழிலாளர்கள் தற்பொழுது பாரிய அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள் பல கிலோமீட்டருக்கு அப்பால் சென்று, பாலைப் பெற்று, நாளாந்தம் விற்பனை செய்து அதில் வருகின்ற வருமானத்திலேயே, தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை  காரணமாக நிலவுகின்ற ஊரடங்குச் சட்டத்தால் தமது அன்றாடத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா, வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த தயிர் உற்பத்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, தமக்கு எந்தவித முதலீட்டுத் தொகை இல்லாதபோதும், தமக்கு கிடைத்த 5,000 ரூபாயை மூலதனமாகக் கொண்டு, பாலின் மூலமாக தயிர், வெண்ணைய் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினர்.

எனினும், தயிருக்கோ, வெண்ணெய் உற்பத்திக்கவோ உரிய விலை கிடைக்காததால் தமது அன்றாட தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

பால் எடுப்பதில் சிரமம் உள்ளதாகவும் அவ்வாறு பாலை எடுத்து தயிர் கடைவதால் எந்தவிதப் பயனும் இல்லை என்றும் மேற்படி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பண்ணை தொழிலாளர்களுக்காக வேண்டி, சலுகைகளையும் நிவாரணங்களையும் தந்து உதவுமாறு, அரசாங்கத்திடம், பண்ணைத் தொழிலாளிகள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X