2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் உற்பத்தியும் பொருட்கள் கண்காட்சியும்

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்

 

திருகோணமலை மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சுயதொழில் உற்பத்தியும் பொருட்கள் கண்காட்சியும், விற்பனையும், திருகோணமலை நகரில் இன்று (10) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள மகளிர் சங்கங்கள் இக்கண்காட்சியில் பங்குகொண்டன.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான டி.டி புஸ்பகுமார, இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் பெரேரா, திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வா உட்பட அதிகாரிகள், பெண்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X