Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த திருகோணமலை மாவட்டத்துக்கான சுற்றுலாத்துறை தொடர்பான திறன் மூலோபாய செயற்றிட்டச் செயலமர்வு நேற்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வின் போது, திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான திறன் விருத்திக்கான ஐம்பதிற்கும் மேற்பட்ட துறைகள் அடையாளம் காணப்பட்டதுடன் இவை மூன்று வருடங்களுக்கான திறன் விருத்திச் செயற்றிட்டங்களாக தயாரிப்பதற்கும் தீர்மானிக் கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு " உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் " S4IG . (எஸ்4 ஐஜி) அனுசரணை வழங்கி இருந்தது.
இந் நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
கே. பரமேஷ்வரன் , பட்டனமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வைத்தியர் ஈ ஜி. ஞானகுணாளன், மாவட்ட திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், கிழக்கு மாகாணசபை திணைக்களத் தலைவர்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும், திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவர் , சுற்றுலா விடுதி உரிமையார்கள் , சுற்றுலாப் படகுச்சேவை நடத்துநர்கள், அழகுக் கலை நிபுணர்கள் , பேக்கரி பயிற்சி வழங்குநர் என பல தனியார் துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் .
மேலும், இந்நிறுவனத்தின் தலைமைக் காரியாலய சிரேஷ்ட முகாமையாளர் சி.ரகுராமமூர்த்தி, தந்திரோபாயம் திட்டமிடல் முகாமையாளர் ர.சரண்யா, திருகோணமலை மாவட்ட முகாமையாளர் மை.மதியழகன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago