Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 14 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்
தம்பலகாமம் – கிண்ணியா வீதி அபிவிருத்தியின்போது, வீதியோரத்திலிருந்த தனியார் காணிகள் பல நஷ்டஈடு வழங்கப்படுமென்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவீகரிக்கப்பட்டன, எனினும் பல வருடங்கள் கடந்த நிலையிலும், இதுவரை பலருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்குரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
தம்பலகாமம் பிரதேச குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (12) பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச குழுவின் இணைத்தலைவர்களின் தலைமையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சகல திணைக்களத் தலைவர்கள்,பிரதேசசபை தவிசாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், முள்ளிப்பொத்தானை, பத்தினிபுரம் ஆகிய கிராமங்களில் பொது மயானம் இல்லை என்பது பெரிய குறைபாடு. இது பற்றி இரண்டு தடவைகள் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளேன். இதற்கென அடையாளம் காணப்பட்ட காணியை வனபரிபாலன இலாகா ஒதுக்கித் தருவதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கிறது. இது அவசரமாக நிறைவேற்றப்படவேண்டியதாகுமெனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
55 minute ago
1 hours ago