2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டான் குளம் பிரதேசத்தில்,  சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை, நேற்று (15) இரவு கைது செய்ததாக, திருகோணமலை மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

போதை பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்கள் மேற்கொண்ட சுற்று வளைப்பின் போதே, மேற்படி கைது இடம்பெற்றதாக, போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆறு பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். 

சிறிமா புர, 4ஆம் கட்டை, சீனன்குடா, ஆண்டான் குளம் ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த 22 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை உப்புவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக, திருகோணமலை மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .