Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
செளபாக்கியா பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம், திருகோணமலை மாவட்டத்தில், நிலாவெளியில் நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டது.
மிகக் குறைந்த மானிய விலையில் பயிர்க்கன்றுகள், பயிர்விதைகள் நிலாவெளி கமநலசேவை நிலையத்தில் விவசாய உத்தியோகத்தர்களால் நிலாவெளி விவசாயிகளுக்கும், மகளிர் கமக்கார அமைப்பு உறுப்பினர்களுக்கும் இதன்போது வழங்கப்பட்டது.
பயிர்க்கன்றுகள், பயிர் விதைகளை மிகக் குறைந்த மானிய விலையில் விவசாயிகள், பொதுமக்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல கமநல சேவைநிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .