ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புடவைக் காடு பகுதியில் சேதமடைந்திருந்த பாடசாலை வீதி, காபட் வீதியாக புனர் நிர்மாணம் செய்வதற்கான பணிகள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வீதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் இரண்டு கோடி இருபத்து ஏழு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட இருக்கின்றது. நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .