2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சோளச் செய்கையை அழிக்க தீவிரமடையும் படைப்புழுக்கள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை - தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சோளப் பயிர்ச் செய்கையில் படைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சோளத் தோட்ட செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இப்படைபுழுவின் தாக்கம் காரணமாக சோள உற்பத்தியில் அழிவுகள் ஏற்படுவதுடன், விளைச்சளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, குச்சவெளி, வெருகல், தம்பலகமம், சிராஜ் நகர், முள்ளிப்பொத்தானை உட்பட பல பகுதிகளிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பயிர் செய்கையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, சாதகமான முடிவுகளைத் தருமாறு சோள செய்கையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X