Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, யான் ஓயா திட்டத்தில் கடமையாற்றிய சீனப் பொறியியலாளரொருவர், அத்திட்டத்தில் சேவையாற்றிய சாரதியொருவரினால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகல்கட-யான் ஓயா திட்டத்தில் கடமையாற்றும் பொறியியலாளரான டோன்ங் ஜெனொவி DONG JINOWEI (32 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
அத்திட்டத்தில் கடமையாற்றிய சாரதி, நேற்றைய தினம் குறிப்புப் புத்தகத்தில் கையொப்பம் பெற்றுக்கொள்ளாத நிலையில், அவ்விடயம் தொடர்பில், இன்று வியாழக்கிழமை (06) விசாரித்த போதே, பொறியியலாளர் தாக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago