2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுமார் 800 பேரிடம் விசாரணை: 50 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில்; இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில்  இதுவரையில் சுமார் 800 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீட்டில் வசித்துவந்த  தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X