2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சாரதிகளின் பணிப் பகிஷ்கரிப்பால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூருக்கும் திருகோணமலைக்கும் இடையே சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ் சாரதிகளும் மூதூர் போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகளும், இன்று புதன்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் காலை 10 வரை பஸ் வண்டிகளை மூதூர் திரிசீடி சந்தியில் நிறுத்தி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற மூதூர் பொலிஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதையடுத்து, மூதூர் - திருகோணமலைக்கான பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது.

பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சாரதிகள் கருத்துத் தெரிவிக்கும் போது,

'நாங்கள், மூதூரிலிருந்து திருகோணமலைக்கு குறிப்பிட்ட தூரமே பணியில் ஈடுபடுகிறோம். இதனால் குறிப்பிட்டளவு இலாபமே எங்களுக்குக் கிடைக்கின்றது.

இவ்வாறு இருக்கையில், கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலிருந்து திருகோணமலைக்கு வருகின்ற பஸ் சாரதிகள், பஸ் வண்டியை மூதூரில் நிறுத்தி பயணிகளை திருகோணமலைக்கு ஏற்றிச் செல்கின்றனர்.

இதனால் மூதூரிலிருந்து திருகோணமலைக்குச் செல்கின்ற எமது பஸ்களுக்கு பயணிகள் போதுமானதாக இல்லாததனால், நாங்கள் பெரும் நஷ்டத்துக்கு மத்தியிலேயே சேவையில் ஈடுபடுகிறோம்' எனத் தெரிவித்தனர்.

இதற்கு உரிய தீர்வு கிடைக்கப் பெற வேண்டுமென்பதற்காகவே, தாம் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .