Gavitha / 2016 ஜூன் 04 , மு.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சிறைச்சாலை பாதுகாவலர் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான போதனைகள் பற்றிய செயலமர்வு, எதிர்வரும் திங்கட்கிழமை 06ஆம் திகதி முதல் புதன்கிழமை 08ஆம் திகதி வரை, சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளரும் சிறைச்சாலை அதிகாரியுமான எம்.எப்.லாஹிர் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதனைகள் வழங்குவது மற்றும் அவர்களுடைய மன நிலையை சிறந்த முறையில் வைத்துக்கொள்ளவும், அவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்த போதனை செயலமர்வு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் 45 சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அனைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago