Thipaan / 2016 ஒக்டோபர் 14 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவுக்கும் கிழக்கு மாகாண சிறுபான்மை சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு திருகோணமலை சட்ட உதவி மன்றத்தில், நேற்று (13) இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் கிண்ணியா மஜ்லிஸ் ஸுரா செயலாளர் ஏ.ஜே.ஏ.றியாஸ், மூதூர் சட்ட உதவி ஆணைக் குழுவின் சட்டத்தரணி எம்.எல் பைஸர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 15க்கும் அதிகமான காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவைகள் விசாரணை செய்யப்பட்டு தீர்க்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கு இணைப்பினை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான முஸ்லிம்கள் விரும்பவில்லை, சமயங்களை நிந்தனை செய்வது தொடர்பில் சரியான சட்டங்கள் வகுத்தல், கிழக்கு மாகாணத்தில் அரச உயர் பதவிகளுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும், இலங்கையில் சமயத் தலங்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற விடயங்களில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாக சட்டத்தரணி எம்.எல்.பைஸர் தெரிவித்தார்.
இதன் போது, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய பிரதிநிதிகளினாலும் சிறுபான்மையினர் தொடர்பான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026