Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்,பதுர்தீன் சியானா
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணிக் கிராமத்தில் நான்கு வயதுச் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை இம்மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜெஹதீஸ்வரன் அஜந்தா எனும் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நீலாங்கேணி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதனை அடுத்து, குறித்த சிறுவனை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
குறித்த சிறுமியை காணவில்லையென அவரது பெற்றோரும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதே சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக புதைக்கப்பட்டமை தெரியவந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .