Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணிப் பகுதியிலிருந்து, ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி, சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவனை, இம்மாதம் 19ஆம் திகதி வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 08 ஆம் திகதி காலை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரும் பொது மக்களும் தேடுதல் நடாத்திய போது சிறுமி கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ தினமன்று குறித்த சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பராமரிப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டான், சிறுவனை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago