Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், தீசான் அஹமட்
திருகோணமலை - கந்தளாய், ஜெயந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த நபரொருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (02) கந்தளாய் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கந்தளாய், ஜெயந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த் 36 வயது நபர் ஒருவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் சூரியவௌ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
51 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
21 Mar 2026