2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி வன்புணர்வு: இளைஞனுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதங்கடவெல பகுதியில் பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி.ஜே.பிரபாகரன், வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை, சுஹதகம பகுதியைச்சேர்ந்த தினேஸ் மதுசங்க (21வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற  15 வயது சிறுமி வீட்டுக்கு வரவில்லையென பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹொரவபொத்தானை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை செய்த போது சிறுமி பற்றிய விவரங்கள் தெரியவந்தன.

சிறுமியை மீட்ட பொலிஸார், வைத்திய பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது.

சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சிறுமியை கடத்திச்செல்ல இளைஞனுக்கு உதவியவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X