Thipaan / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியாவில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஷ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுப் புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.
கலன்பிந்துனுவௌ, புல்மண்டலாவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், கிண்ணியா, குரங்கு பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரை கடந்த ஆறு மாதமாக அலைபேசியூடாக காதலித்து வந்த நிலையில், குறித்த சிறுமியை கிண்ணியாவிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் அழைத்துச் சென்று வைத்திருந்துள்ளார்.
அங்கு சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறுமியின் பெற்றோர், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரை செவ்வாய்கிழமை (09) கைது செய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமி, கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago